பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண் சுமந்த் மதுரை 257 மட்டமான குதிரைகளாகி மனிதர்களைச் சுமந்து கயிற்றலும் சங்கிலியாலும் கட்டுண்டு சுதந்தரத்தை இழந்து விட்டோம். மனிதன் அடிக்கும் சவுக்கடியும் வாங்கினுேம். பகலிலே பட்ட பாடு இனி ஏழேழு பிற விக்கும் வேண்டாம், இதுவரைக்கும் இந்தத் துன் பத்தை அநுபவித்ததே இல்லேயே நம் மேலே கயிற்றி ல்ை உண்டான வடுவும் சவுக்கால் அடித்த தழும்பும் பிறர் பரிகாசம் பண்ணும்படி இருக்கின்றன. போதும் இந்த வாழ்வு. இந்த இடத்தை விட்டு, விடிவதற்கு முன்னே போவதுதான் நல்லது' என்று பேசிக் கொண்டன. - - "சாப்பிடுவதற்கு ஏதாவது நல்ல பொருள் இருக் கிறதா?'நண்டு இல்லை; நத்தை இல்லை; ஊன் இல்ல்; ஒன்றும் இல்லை ; கடலேயாம், கொள்ளாம், பயிரும் ! இவற்றைக் கொண்டுவந்து வைக்கிருர்கள் சீ! இவற்றை யார் தின்பார்கள் ?? என்று சில நரிகள் உடனே நரிகள் எல்லாம் தம் கட்டைஅவிழ்த்துக் கொண்டு புறப்பட்டன, போகும்போது சும்மா போகக் கூடாதா? "நரி வலம் போனுல் நல்லதா, இடம் போனுல் நல்லதா?’ என்று கேட்டவனுக்கு, மேலே விழுந்து கடிக்காமல் போனுல் நல்லது' என்று. சொன்னவன். பேச்சு, அநுபவத்திலே பிற ந் த து அல்லவா ? இந்த நரிகள் போகும் போக்கில் அங்கே இருந்த உண்மையான குதிரைகளேக் கடித்து ரத்தத் தைக் குடித்துச் சென்றன. விடுதலே பெற்ற மகிழ்ச்சி தாங்காமல் ஊளையிட்டுக்கொண்டு ஓடின. கணக் கில்லாத நரிகளாதலின் ஊர் முழுவதும் ஊளேயிட்டுக் கெர்ண்டே ஓடும்போது மக்கள் விழித்துக் கொண் வர,பா. - 17