பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26s; வாருங்கள் பார்க்கலாம் 2 இவ்வாறு தன் அன்பர் கதறவே அவருடைய பெருமையை உலகந்துக்கு வெளிப்படுத்த வேண்டு மென்று இறைவன் கருதின்ை. வையையாற்றில் திடீ ரென்று என்றும் இல்லாதபடி வெள்ளம் பெருகும்படி செய்தான். இயற்கையாக உள்ள கரையை உடைத் துக்கொண்டு வெள்ளம் எங்கும் பரவத் தொடங் கியது. கடை வீதியிலும் மன்றங்களிலும் யானே கட்டிய இடங்களிலும் வெள்ளம் பாய்ந்தது. நகர் முழுவதும் உள்ளவர்கள் என்ன செய்வ தென்று அறியாமல் அல்லோலகல்லோலமாகித் தடு மாற, அதனே உணர்ந்த அரசன் தன் அமைச்சரை அழைத்து 'வெள்ளத்தைத் தடுப்பதற்கு வேண்டிய காரியங்களேச் செய்யுங்கள்’ என்று சொல்ல, அவர் க்ள் அவ்வாறே செய்யப் புறப்பட்டார்கள். ஊரில் உள்ளவர்களில் ஒவ்வொருவரும் இன்ன இன்ன இடத்தில் கரையை உயர்த்த வேண்டு மென்று அளந்து வரையறை செய்தார்கள். பறை யறைந்து கூலியாட்களே வருவித்து, அவரவர்களிடம் ஒப்பித்தார்கள். அங்கங்கே அரசாங்க ஊழியர்களைக் கொண்டு, நடக்கும் வேலையை மேற்பார்வையிடச் செய்தார்கள். ஊருக்கே வந்த அபாயமாதலால் எல்லோரும் வேகமாக வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தப் பாடுபட்டார்கள். அந்த ஊரில் பல ஆண்டுகள் மூத்துப் புழுத்த கிழவி ஒருத்தி இருந்தாள். அவளேச் செம்மனச் செல்வி என்றும், வந்தியென்றும் அழைப்பார்கள். அவள் தினந்தோறும் பிட்டுச் சுட்டு விற்பவள்.