பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 வாருங்கள் பார்க்கலாம் இந்தக் கோலத்தோடு, “கூலியாளோ, கூலி யாள்' என்று கூவிக்கொண்டே வந்தி இருக்கும் தெருவின் வழியே வந்தான் இறைவன். அவன் கூவியதைக் கேட்டவுடன் மகிழ்ச்சி மிகப் பெற்ற வந்தி அவனே அழைத்து, "அப்பா, என் பங்கை நீ அடைத்துத் தருவாயா?” என்று கேட்டாள். அவன், “அடைக்கிறேன்; நீ என்ன கூலி தரு வாய்?’ என்று கேட்டான். "பிட்டுத் தருகிறேன்” என்று கிழவி சொன்னுள். அதற்கு ஒப்புக்கொண்ட இறைவனுகிய கூலியாள், :இப்போது எனக்கு மிக்க பசியாகவும் களேப்பாகவும் இருக்கிறது. முதலில் எனக்கு உதிர்ந்திருக்கும் பிட்டைக் கொடுப்பாயானல் அதைத் தின்று இளைப் பாறிவிட்டு உன் கரையை அடைத்துத் தருகிறேன்" என்ருன். ... * - கிழவி பிட்டின்மேல் மூடியிருந்த துணியை நீக்கி, உதிர்ந்த பிட்டை அள்ளி எடுத்து அவன் கையில் அளித்து, இதைச் சாப்பிடு அப்பா!' என்று: கொடுக்க, இறைவன் தன் வேட்டியை விரித்து வாங்கி அமுது செய்யலான்ை. அதை உண்ணும் போதே, "ஆ ஆ! இது எவ்வளவு சுவையாக இருக் கிறது! குழந்தைக்குத் தாய்ப்பால் எவ்வளவு இனிமை யாக இருக்குமோ, அப்படியல்லவா இருக்கிறது? இது மதுரைச் சொக்கநாதனுக்கே அர்ப்பணம்' என்று சொல்லிச் சொல்லித் தலையசைத்துக் கொண்டு சுவைத்தான். - எனக்கு அம்மாவும் இல்லை; அப்பாவும் இல்லை. தனி ஆசாமி நான். கூலி வேலை செய்யலாம் என்று