பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263 வாருங்கள் பார்க்கலாம் நமக்கும் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் அதை வாத ஆரன் உதவின்ை. அதனே அறியாமல் நீ அவனே வருத்தினுய், நரிகளேயெல்லாம் குதிரையாக்கி நாமே கொண்டு வந்து வழங்கினுேம். அவை இரவில் நரியாகிச் சென்றன. அதல்ை நீ மறுபடியும்.அவனத் தண்டித்தாய். அதைப் பொருமல் வையையில் வெள்ளம் வரச் செய்தோம். வந்திக்கு ஆளாய் வந்து பிரம்படி பட்டு ஒரு கூடை மண் போட்டுக் கரையை உயர்த்தி மறைந்தோம், இவ்வளவும் செய்தது வாதவூரன் பொருட்டாக, அந்த வித்தகன் தன்மையைச் சிறிதும் நீ அறியவில்லை எம்மிடத்தில் அன்புடைய அவன் உனக்கு இம்மைப் பயனும் மறுமைப் பயனும் தேடித் தந்த உத்தம்ன். அகப் பற்றும் புறப்பற்றும் நீத்தவன். அவனே அவன் விருப்பம் போல விட்டு விட்டு நீ நீதிமுறை வழுவா மல் செங்கோலோச்சி இன்புற்று வாழ்வாயாக' என்று ஒலி பிறந்தது. - அதனே இரு செவியும் ஆரக் கேட்ட பாண்டிய மன்னன் அச்சமும் உவகையும் கொண்டான் ; அதிசய வெள்ளத்தில் ஆழ்ந்தான். அந்த அன்பர் எங்கே இருக்கிருர்?' என்று தேடி ஓடினன். அவர் மதுரைத் திருக்கோயிலில் இருக்கக் கண்டு அவரை அணுகிக் காலில் வீழ்ந்து இறைஞ்சின்ை. “பெருமானே, அறியாமையில்ை நான் பல கொடுமை புரிந்தேன். என் தவப்பேருக நீங்கள் எனக்குக் கிடைத்திருக்கிறீர்கள். நான் செய்த பிழை களேயெல்லாம் பொறுத்தருளி முன்போல ஆட்சி செய்தருள வேண்டும்" என்று வேண்டின்ை.