பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பெருந்துறை 273 புரம், ஞானபுரம், தேசுவனம், யோகபீடபுரம்...' என்று வரிசையாக அவை அடுக்குகின்றன. இவ் வளவு இருந்தாலும் ஆவுடையார் கோயில் என்ருல் எளிதில் யாவரும் தெரிந்து கொள்வார்கள். - ஆவுடையார் கோயிலாகிய திருப்பெருந்துறை எங்கோ ஒரு மூலையில் இருக்கிறது. அறந்தாங்கி ரெயில்வே ஸ்டேஷனில் இறங்கி ஒன்பது மைல் பஸ்ஸில் போகவேண்டும், பழைய நூல்களின்படி அது பாண்டி நாட்டில் உள்ள தலம். இன்றைப் பிரிவின்படி சோழ நாடாகிய தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறது. - - ஒரு முறை இரவில் முன்பு ஆவுடையார் கோயில் சென்று தரிசனம் செய்திருக்கிறேன். அது போதுமா? நின்று நிதானமாகத் தரிசித்துக்கொண்டு அங்குள்ள மூர்த்திகளையும் சிற்பங்களையும் பார்த்துப் படம் எடுத்துக் கொண்டு வரவேண்டுமென்ற ஆவல் உண்டாயிற்று, மாணிக்கவாசகருடைய வரலாற்றைப் பின்பற்றிச் செய்யும் யாத்திரை அல்லவா இது ? ஆவுடையார் கோயி ல் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்தது. சைவத்தையும் தமிழை யும் பிற கலைகளையும் வளர்த்துப் புகழ் பெற்றது திருவாவடுதுறை யாதீனம். ஒரு விதத்தில் தமிழ் உலகமே அந்த ஆதீனத்துக்குக் கடமைப் பட்டிருக் கிறது என்று சொல்லிவிடலாம். எப்படி என்ரு கேட் கிறீர்கள் ? - • * - இன்று தமிழ் இலக்கியம் பழஞ் செல்வத்தால் பெருமை பெற்றிருக்கிறது. சங்க கால இலக்கியங் களின் ஆராய்ச்சியால், பழந்தமிழர் வரலாறும், அவர்.