பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பெருந்துறை 279 யில் இந்தத் தலத்தைப்பற்றிய வரலாறுகளே விரிவாக எழுதியிருக்கிருர்கள். அந்தப் புராணம் மகா வித்து வான் மீனுட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றியது. அதனே அப்புலவர் பெருமான் திருப்பெருந்துறையில் சில காலம் தங்கிப் பாடி அரங்கேற்றினர். அப்போது ஐயரவர்களும் உடன் இருந்தார்கள். புராணம் அரங் கேற்றும்போது நிகழ்ந்த நிகழ்ச்சிகளே அவர்கள், பிள்ளையவர்கள் சரித்திரத்திலும், என் சரித்திர த் திலும் அழகாக எழுதியிருக்கிருள்கள். ஐயரவர்களிடம் நேரில் நான் கேட்டறிந்தனவும் பல உண்டு. ஆகை யால், திருப்பெருந்துறையைப் பற்றிய செய்திகள் பலவற்றை உணர்ந்திருக்கிறேன், ஆலுைம் அவை, தொட்டுக் காட்டாத வித்தை !! நேரே இது இன்னது என்று தெரிந்து கொள்வதுபோல் ஆகுமா? அப்படித் தெரிந்துகொள்ள எங்களுக்கு ஒர் அருமை யான வழிகாட்டி கிடைத்தார். திருக்கோயிலில் எழுந் தருளியிருக்கும் எம்பெருமானேயும் அம்பிகையையும் பூசித்து வழிபடும் உரிமைபெற்றவர் அவர்; நீ ஆத்ம நாத நம்பியார் என்னும் திருநாமமுடையவர். அந்த நம்பியார் எல்லாம் தெரிந்தவர். அவரை நம்பி யார் என்ன கேட்டாலும் சொல்வார்' என்று அங்குள்ள வர்கள் சொன்னர்கள். அவருடைய உதவி எங் களுக்குக் கிடைத்தது. கண்ணுலே கண்டும், காதாலே கேட்டும் அறிந்துகொண்ட செய்திகள் பல. படித்து அறிந்தவையோ பின்னும் பல. எல்லாவற் றையும் சொல்லவேண்டுமானல்-அடே அப்பா! நானூறு பக்கம் எழுதலாம். அவ்வளவு விரிவாகச் சொல்லுவேனென்று பயப்படாதீர்கள். கொஞ்சம் என்னுடன் கற்பனை ரதத்தில் ஏறித் திருப்பெருந்