பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பெருந்துறை 289 நிறைவேறத் தடை என்ன? பட்டீசுவரத்தில் இருந்த பிள்ளையவர்களுக்கு, தம்பிரான் தம்முடைய கருத் தைச் சொல்லி அனுப்பினர். "திருப்பெருந்துறைக்கே வந்து சிலகாலம் தங்கி, புராணத்தை இயற்றி அரங்கேற்றி விட்டுச் செல்லலாம் என்று தெரிவித் திருந்தார். நாத்தினவுடைய நாவலராகிய பிள்ளேய. வர்கள் இந்தச் செய்தியைக் கேட்டவுடன் புதிய ஊக்கம் கொண்டார். திருப்பெருந்துறையில் வெயிலு வந்த பிள்ளேயார் எழுந்தருளியிருக்கிருர் என்பதும் பிற தலச் செய்திகளும் அப்புலவர் பெருமானுக்கு நன்ருகத் தெரியும். அவர் அங்கே சென்று பல காலம் தரிசித்தவர். இப்போது புராணம் பாட வேண்டும் என்ற நினைப்பு உண்டானவுடன் அவர் மைேரதம் அவரைத் திருப்பெருந்துறைக்கே கொண்டு போய் விட்டது. வெயிலுவந்த விநாயகருக்கு முன்னல் நின்றுகொண்டு வழிபட்டார். உடனே, இனி மலரப். போகின்ற புராணத்தில், விநாயகர் வணக்கத்தில் ஒரடி எழுந்தது. வெயிலுவந்த விநாயகரின் திரு நாமத்தில் வெயில் இருக்கிறது. அதனோடு கவிஞர் நிலவைப் பிணேத்தார். நிலவுவந்த முடியிளுெடு வெயிலுவந்த மழகளிற்றை கினைந்து வாழ்வாம். என்ற அடி உ தயமாயிற்று. இந்த வரலாற்றை ஐயரவர்கள் எழுதியிருக்கிருt கள். வெயிலுவந்த விநாயகர் திருமுன் நிற்கும். பொழுது இந்த நினைவு எனக்கு வந்தது. வா.பா. - 19