பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பெருந்துறை 295 பகுதியில் தூண்களுக்கு மேலே பல பாடல்கள் கல் லெழுத்தாக இருக்கின்றன; அவற்றிலிருந்து, இந்தப் பாவு கல் எல்லாம் போட்ட காலம் சாலிவாகன சகம் 1504-ஆம் வருஷம் (கி. பி. 1581) என்று தெரிகிறது. - திதிக்கும் சகாத்தமிங் கொன்றரை ஆயிரம் செல்லுறுநான்கு உதிக்கும் பிலவத்தில் பங்குனி மாதத்தில் ஒன்பதிற்குப் பதிக்கும் கனக சபைமண்ட பக்தனிற் பாக்கலெலாம் மதி க்கும் படிமுகித் தானெங்கள் மாணிக்க வாசகனே. இது ஒரு பாட்டு. இந்தப் பாட்டைக் கண்டால் மாணிக்கவாசகரே இந்த மண்டபத்தைக் கட்டினும் எ ன் று சொல்லத் தோன்றும். பதிருைவது நூற்ருண்டில் மாணிக்கவாசகர் இருந்திருக்க நியாயம் இல்லை. ஆனுல் பாட்டில் வருகிற பெயர் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகரைத்தான் குறிக்கிறது. அப்படியானுல் காலத்துக்கும் பெயருக்கும் முரண் பாடு அல்லவா? இந்தச் சிக்கலே மற்றப் பாடல்கள் தீர்க்கின்றன. அந்தப் பாடல்களில், பாக்கலெல்லாம். - வேடிக்கை யாகச்செய் தானெங்கள் கோபுர வேலவனே