பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பக் கருவூலம் தில்லே வாழ் அந்தணர் மூவாயிரவர் என்பது யாவருக்கும் தெரிந்த செய்தி. அந்த மூவாயிரம் பேரில் நடராசப் பெருமானும் ஒருவன். இது சிதம் பரத்தில் உள்ள முறை. இது போலவே திருப்பெருந் துறையிலும் ஒரு முறை உண்டு. அங்கே மூவாயிரம் பேர்; இங்கே முந்நூறு பேர். அங்கே எப்படி இறை வனும் மூவாயிரம் பேரில் ஒருவனே அவ்வாறே இங் கும் ஆத்மநாதர் முந்நூற்றுவரில் ஒருவர். ஒரு காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவன் ஆத்ம நாதருடைய பூசை இனிது நடைபெற வேண்டுமென்ற கருத்தோடே காசியிலிருந்து முந் நூறு மறையவர்களே வரச் செய்து, அவர்களே இந்தத் தலத்தில் நிறுவ எண்ணின்ை. மறையவர்கள் வந்த போது அவர்களுக்கு முந்நூறு வீடுகளைக் கட்டுவித் துக் குடியேற்ற ஏற்பாடு செய்தான். அவர்களுக் கெல்லாம் பொன்னுடை வழங்க எண்ணி முந்நூறு ஆடைகளே எண்ணி வைத்து, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்ருகக் கொடுத்து வந்தான். கடைசியில் ஓராடை எஞ்சியது. மறையவர்களே எண்ணிப் பார்த்தபோது முந்நூறு பேர்களில் ஒருவர் குறைந்தார். அவர்கள் ஒன்றும் தெரியாமல் திகைத்தபோது ஆத்ம நாதரே ஒரு முதிய மறையவராகி எழுந்தருளி வந்து, பாண்டியனிடம் பொன்னுடையைப் பெற்று, அவனுக்