பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பக் கருவூலம் 303 “அந்த நிலங்கள் உங்களுடையன என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா?’ என்று கேட்டான் அரசன். மறையவர்கள் தங்களுக்கு மறை தெரியுமென்றும் வியாகரணம் வருமென்றும் வெவ்வேறு கலைகள் வருமென்றும் சொல்லத் தொடங்கிஞர்கள். “உங்களுடைய வித்தைக்கும் இதற்கும் சம் பந்தம் ஒன்றும் இல்லை. இந்த நிலங்கள் இப்போது யார் வசம் இருக்கின்றன?' என்று கேட்டான் அரசன். - 'குறும்ப வேளானிடம் இருக்கின்றன.' “அவற்றை உங்களுக்கு யார் வழங்கினர்கள்?" 'உன்னுடைய முன்னுேர்கள் வழங்கினர்கள்.” “அதற்கு ஆவண ஒலே இருக்கிறதா?” "அதையும் அவன் கவர்ந்துகொண்டான்'. "ஆட்சி, ஆவணம் இரண்டும் இல்லே என்ருல் யாரேனும் தக்கவர் சாட்சி சொல்ல முடியுமா?” "நாங்கள் சொல்லுகிருேமே!’ "வழக்குரைப்பவர்கள் சாட்சியாக முடியுமா? வேறு யாரேனும் சாட்சி கூறுவார்களா?” r. "குறும்ப வேளாளுல் தங்களுக்கு ஏதேனும் தீங்கு உண்டாகும் என்ற அச்சத்தால், சாட்சி சொல்ல ஒருவரும் வரமாட்டேன் என்கிருர்கள்.' "இது என்ன வியப்பான வழக்காக இருக்கிறது ஆதாரம் ஒன்றும் இல்லாமல் நிலங்கள் உங்களுடை