பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 வாருங்கள் பார்க்கலாம் பலதுளியாறு என்ற பெயர் எனக்குப்பழைய நூல் களில் வரும் பஃறுளியாற்றை நினைப்பூட்டியது. பல் துளியாறு என்பதே பஃறுளியாறு என்று சந்தியில் மாறும். கன்யாகுமரிக்கும் தெற்கே குமரியாறு, குமரி மலே, பஃறுளியாறு என்றவை இருந்தன என்று சங்க நூல்களால் தெரிய வருகின்றது. பஃறுளியாறு என்ற பெயர் பழையதாகத் தோன்றுகிறது. பல துளியாறு என்பது புதியதாகத் .ே த ன் று கி ற து. ஆளுல் இரண்டு பேர்களும் ஒன்றே, இந்தப் பேருள்ள பழைய ஆறு போனலும் அந்தப் பேரோடு வேறு ஓர் ஆறு இங்கே இருக்கிறது என்று எண்ணி இன் புற்றேன். - முந்நூற்றுவரே ஆத்மநாதருக்கும், சிவயோக நாயகிக்கும், குருந்த மூலத்துக்கும் பூசை செய்கிருர் கள். மாணிக்கவாசகருக்கு ஆதி சைவர்கள் பூசை செய்கிருர்கள். - குதிரைச் சுவாமி மண்டபத்தில் உள்ள சிற்பங் களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். குதிரைச் சுவாமிக்கு நேரே உள்ள தூணில் மணிவாசகர் மந்திரிக் கோலத்தில் நிற்கிருர், போகும் வழிக்கு மேற்கே குதிரைச் சுவாமி இருக்கிருர். அந்தத் துணுக்குக் கிழக்கே வழியின் வலப் பக்கத்தே மாணிக்கவாசகர் காலத்தில் இருந்த பாண்டியன், அமர்ந்த கோலத்தில் இருப்பதாக உள்ள உருவம் இருக்கிறது. அ ரி ம ர் த் த ன பாண்டியன் என்பது அவன் பெயர் என்று திருவிளையாடற் புராணம் தெரி விக்கிறது. - அவனுக்கு எதிரே உள்ள தூணில் குறும்ப வேளானுடைய உருவம் நிற்கிறது. அவன் இறை