பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பக் கருவூலம் 313 கல்லாலே ஆன விளக்குக் கம்பங்கள் இரண்டு இருபுறமும் இருக்கின்றன. இவற்றை நாட்டுக் கல் விளக்கு என்று சொல்கிருர்கள். இனி அடுத்த மண்டபத்துக்குப் போகலாம். இதுவரையில் இரண்டு பிராகாரங்களைத் தாண்டி வந்தோம். இனிமேல் மூன்ரும் பிராகாரத்திலுள்ள தேவ சபையைப் பார்க்கலாம். இதைச் சுந்தர பாண்டியன் மண்டபம் என்றும் சொல்வார்கள். இந்தப் பிராகாரம் மிகவும் முக்கியமானது. பல சந் நிதிகளே உடையது. வலம் வந்து கொண்டே ஒவ் வொரு சந்நிதியாகப் பார்ப்போம். முதலில் வடக்கே பார்த்திருக்கும் மாணிக்க வாசகர் சந்நிதிக்கு வருகிருேம். இங்கே எழுந்தருளி யிருப்பவர் உற்சவமூர்த்தி. இத்தலத்தில் எல்லா விழாக்களும் மாணிக்கவாசகருக்கே என்று முன்பே சொல்லியிருக்கிறேன். நந்திகேசுவரர், சண்டிகேசு வரர் இங்கே இல்லே. மற்ற ஆலயங்களில் புறத்திலும் அகத்திலும் நந்தியைக் காணலாம். நந்திதேவரே மாணிக்கவாசகராக அவதாரம் செய்தார் என்பது ஒரு கொள்கை. - 3. "குடமுழா நந்தீசனே வாசகனுக் கொண்டார்’ என்று அப்பர் சுவாமிகள் இதையே குறிப்பதாகச் சொல்வதுண்டு. நந்தியே மாணிக்கவாசகராக எழுந் தருளியிருப்பதனுல் நந்திக்கு வேறு உருவம் அவ சியம் இல்லையாயிற்று. அப்படியே இங்கே மாணிக்க வாசகரே இ ைற வ ன் நிர்மாலியங்களை ஏற்கும் உரிமை பெற்றமையால் சண்டேசர் சந்நிதியும் இல்லை.