பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 வாருங்கள் பார்க்கலாம் மாணிக்கவாசகருக்கு ஆண்டில் இருமுறை திரு விழா நடைபெறும். அவருடைய திருவவதார விழா மார்கழியில் நடைபெறுகிறது. அவர் முக்தி பெற்றது ஆனிமகம். ஆனி உத்தரத்தில் உபதேசக் காட்சி நடக்கும். மார்கழி ரோகிணியிலும் ஆனி மகத்திலும் தேர் விழா நிகழும். பத்து நாள்.உற்சவம்; பதினேராம் நாள் உபதேசம். பத்து நாட்களும் இரவில் மாணிக்க வாசகரைத் தேவ சபையில் சுவாமிக்கு முன் எழுந் தருளச் செய்வது வழக்கம். மாணிக்கவாசகர் உற்சவ மூர்த்தி மிகவும் அழ கான உருவம். அவரைத் தரிசித்துக் கொண்டு நடந்தால் கிழக்குப் பிராகாரத்தில் வீரபத்திரரைத் தரிசனம் செய்து கொள்ளலாம். அம்மை யோகம் செய்யும்போது காவல் புரிந்து நிற்பவர் அவர். இந்தப் பிராகாரத்தின் ஓரத்தில் அதாவது வட மேற்கு மூலேயில் சிவயோக நாயகி சந்நிதி இருக்கிறது. வீர' பத்திரர் சந்நிதிக்கும் அம்பிகை சந்நிதிக்கும் இடையே ஓர் ஊஞ்சல் இருக்கிறது. அதில் மெத்தையிட்டு வைத்துப் பூசிக்கிருர்கள். கீழே உள்ள மெத்தை இராமநாதபுரம் அரசர்கள் வழங்கியது. அதற்குமேல் மற்ருெரு மெத்தை இருக்கிறது. ஓர் அன்பருடைய கனவில், "கிழவருக்கு உடம்பு வலிக்கிறது; மெத்தை வேண்டும்' என்று அம்பிகை தோன்றிச் சொல்ல, அப்படியே தைத்துப் போட்டாராம். ஆத்மநாத ரைக் கிழவர் என்று சொல்வது வழக்கம். சிவயோக நாயகியின் சந்நிதி தெற்குப் பார்த்தது. ஆனல் வாயில் கிழக்கு நோக்கியிருக்கிறது. அன்பர்கள் தெற்குப் பார்த்துள்ள சாளரத்தின் வழியே தரிசனம் செய்துகொள்ள வேண்டும். இங்கே அம்பிகை