பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகத்தின் பொருள் 319 | வைணவர்களுக்கு ரங்கராஜா அறிதுயில் கொள்ளும் gரங்கம் கோயில். அம்பலத்தில் ஆனந்த நடனம் செய்யும் கூத்தப்பிரான் எல்லாருக்கும் பொதுவான கடவுள். சிதம்பரத்தில் நடனமாடும் அப்பெருமானே எல்லாச் சிவாலயங்களிலும் வைத்து வழிபடுகிருர்கள். அதனுல் நடராஜப் பெருமான் எழுந்தருளியிருக்கும் சிற்றம்பலத்துக்குப் பொது என்று ஒரு பெயர் உண்டு. இங்கே எனக்கு ஒரு பழைய வரலாறு நினைவுக்கு வருகிறது. காஞ்சீபுரத்துக்குச் சிவஞான முனிவர் ஒரு புராணம் பாடினர். அதில் முதலில் சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு ஒரு வணக்கம் சொல்லி யிருக்கிருர். புராணம் பாடி முடிந்தவுடன் அதை அரங்கேற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்தனர். வெளி யூரிலிருந்து அரங்கேற்றத்தைப் பார்ப்பதற்காகப் பல அன்பர்கள் வந்திருந்தார்கள். சிவஞான முனிவ ருடைய மாணுக்கராகிய கச்சியப்ப முனிவரும் வந் தார். - - அரங்கேற்றம் ஆரம்பமாயிற்று காஞ்சிபுரத்தில் சிவஞான முனிவரிடம் பொருமை கொண்ட பேர்வழி கள் சிலர் இருந்தார்கள். அரங்கேற்றத்தின்போது கேள்விகளைக் கேட்டுச் சிவஞான முனிவரைத் திக்கு முக்காடச் செய்ய வேண்டும் என்று அவர்கள் தீர் மானித்தார்கள். அவர்களுக்குத் தலைவர் ஓர் ஒது வார் ; சிவாலயத்தில் தேவாரம் ஒதுகிறவர். அரங்கேற்றத்தில் சிவஞான முனிவர் நடராஜப் பெருமான் துதியைப் படித்தார். அப்போது அந்த ஒதுவார் எழுந்தார். "ஒரு சந்தேகம்' என்ருர். 'என்ன? என்று கேட்டபோது, காஞ்சீபுரத்துக்குப்