பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோணிபுரம் 23 உமாபாகர் முன் நின்றபோது கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தருடைய நினைவு எனக்கு வந்தது. அவர் இந்த ஊரில் பல காலம் வாழ்ந்தவர். உமாயாகரையும் சட்டை நாதரையும் திருஞானசம்பந்த மூர்த்தியையும் வழிபட்டவர். உமை வாழும் பாகத்தானே அப் பெரும் புலவர் வழி பட்டார். தாம் இயற்றிய தக்கயாகப் பரணியில் காப்புக்குப்பின் நூலைத் தொடங்குகிறர். எடுத்த எடுப்பில் உமாபாகரை வாழ்த்துகிருர்: புயல்வாழ கெடிதுாழி புவிவாழ முதல்.ஈறு புகல்வேதநூல் இயல்வாழ உமைவாழ்வ தொருபாகர் இருதாளின் இசைபாடுவாம். உலகம் வாழ இறைவன் இப்படியெல்லாம் கோலம் கொண்டு வீற்றிருக்கிருளும். ஒழுக்கமும் அமைதியும் பெற்று, அன்பும் தியாகமும் மலிய, கலேயும் கல்வியும் ஓங்க விளங்கிய தமிழ் நாட்டில் இத்தகைய மூர்த்திகளும் கோயில்களும் தமிழர் வாழ்வை எவ்வளவு தூரம் பண்படுத்தின என்பதை நினேந்து புளகம் பூத்தேன். - உமாபாகர் சந்நிதியை வலம் வந்து மற்ருெரு சிறிய படிக்கட்டில் ஏ றி ைல் சட்டைநாதர் சந்நிதிக்குப் போகலாம். சட்டைநாதர் மிகவும் சக்தியுள்ள தெய்வம். நீராடித் தூய்மையாகவே அவர் இருக்கும் இடத்துக்குப் போக வேண்டும். சட்டைநாதர் பைரவ மூர்த்தி தோலால் அமைந்த சட்டை புனேந்து, எலும்புகள் முறுக்கிய தண்டத்தை ஏந்தியிருப்பவர். தோற்சட்டை அணிந்தமையால்