பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகத்தின் பொருள் 33% என்னேயாளுடைய எம்பெருமான் திருவருளே’ என்று சொல்லி உருகினர். அப்போது தில்லை வாழந்தணர்கள் மாணிக்க வாசகரைப் பார்த்து, இந்தப் பாடல்களுக்குப் பொருள் தெரிவிக்க வேண்டும்' என்று வேண்டிக் கொண்டார்கள். அவர், கனகசபைக்கு முன் வந்து சொல்கிறேன்' என்று யாவரையும் அழைத்துக் கொண்டு பொன் மன்றத்துக்கு வந்தார். சிவஞான முதிர்ச்சியும், உள்ளுணர்வும் தலைப்பட்டமையில்ை, இறைவன் திருவருட் குறிப்பை உணர்ந்த அவர் அம்பலவாணர் திருமுன் நின்ருர். மறையவர்களும் பிறரும் திருவாசகத்திற்குப் பொருள் சொல்லப் போகிருர் அவர் என்று எதிர்நோக்கி ஆவலுடன் நின்ருர்கள். "இவரே திருவாசகத்தின் பொருள்' என்று நடராஜப் பெருமானேச் சுட்டிக் காட்டி அப்படியே மறைந்தருளினர் மாணிக்கவாசகர், இறைவன் திரு வடியில் இணேந்த பரமானந்த முத்தியைப் பெற்ருர், அன்று ஆனி மாதம் மக நட்சத்திரம். அம்பலத்தே யாடும் சிவபிரான் அவரைப் பாலோடு கலந்த நீராகத் தம்மோடு ஐக்கியப் படுத்திக் கொண்டார். செய்காட்டும் கமுகடவித் தில்லையுளார் பொருள்கேட்கக் கைகாட்டித் தம்உருவம் காட்டாமல் மறைந்தவரைப் பைகாட்டும் பேரரவப் - பணியுடையார் தமக்கன்பு மெய்காட்டிப் பாலுடனே மேவியகீர் ஆக்கிஞர்.