பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாருங்கள் பார்க்கலாம் 3 3 2 (செய் - வயல். கமுகடவி - கமுகஞ்சோலை. பை-படம், பணி - ஆபரணம். அன்பு மெய்காட்டி - அன்பின் மெய்த்தன்மையை உலகினருக்குப் புலப் படுத்தி.) さ Eாணிக்கவாசகர் ஆனி மகத்தில் சிற்றம்பலத் தில் நின்றபடியே மறைந்து இறைவளுேடு ஒன்றிய செய்தியை நினைந்து சிதம்பரம் சென்றேன். வெவ் வேறு சமயங்களில் சென்றது உண்டு; ஆனுலும் இந்த முறை மாணிக்கவாசகரோடு சம்பந்தம் உள்ள இடங்களைக் கண்டு செய்திகளைச் சேகரித்து வர வேண்டும் என்ற ஆசையோடு போனேன். சிதம் பரத்தை எத்தனே தடவை தரிசித்தால் என்ன ? தெவிட்டும்ா ? மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே' என்று, அம்பலவாணரைத் தரிசிப்பதாக இருந்தால் இந்தப் பிறவியும் வேண்டிப் - பெறத்தக்க தென்று அப்பர் சொல்கிருர், அவர் எம் பெருமான் திருமுன் நின்றபோது என்ன என்ன அநுபவத்தைப் பெற்ருரோ? சுந்தரர் மாறிலா மகிழ்ச்சி'யில் மலர்ந்ததாகச் சேக்கிழார் பாடுகிருர். சம்பந்தரும் இங்கே வந்து இன்புற்ருர் மாணிக்க வாசகர் ஆனந்தக்கடலில் துளைந்தார். இந்த நினைவு களோடு சந்நிதியில் நின்ருல் நாம் இருபதாம் நூற்ருண்டில் வாழ்கிருேம் என்பதை மறந்துவிடலாம். சிவகங்கைத் தீர்த்தமும், சிற்சபையும், கோயிலும் சி தம் பர த் தி ல் இன்றும் மக்களின் பக்தியை வளர்த்துக் கொண்டு விளங்குகின்றன.