பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகத்தின் பொருள் 333. மாணிக்கவாசகருடைய வரலாற்ருேடு தொடர் புடைய சிற்பங்கள் எவையேனும் இருக்கின்றனவா என்று ஆராய்ந்தேன். கனகசபைக் கீழ்ப்புறத்தில் முருகன் சந்நிதிக்குக் கீழே இரண்டு சிற்பங்கள் இருக்கின்றன. குருந்த மரத்தடியில் எழுந்தருளியிருக் கும் குருநாதர் மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்யும் கோலமும் தீட்சை செய்யும் கோலமும் அமைந்த சிற்பங்களைக் கண்டேன். அவற்றையன்றி வடபுறம் பரி நரியாக்கியது முதலிய திருவிளையாடல் சிற்பங்களையும் கண்டேன். திருக்கோயிலில் நால்வர் திருவுருவங்களும் பூசிக்கப் பெறுகின்றன. மேற்குப் பிராகாரத்தில் அந்த நால்வருடைய பிம்பங்களும் இருக்கின்றன. உற்சவ காலங்களில் உலா வரும் உற்சவ மூர்த்தியாகிய மாணிக்கவாசகர் மிகமிக அழகிய வடிவத்தோடு விளங்குகிருர் இடக்கையில் புத்தகமும், வலக்கையில் அபயமும் உடையவராக அவர் நிற்கிருர். - திருவாதிரை முடியப் பத்து நாளும் ஆலயத்தில் தேவார திருவாசகங்களே ஓதாமல் திருவெம் பாவையை மாத்திரம் ஒதுகிருர்கள். அப்போது இங்கே உற்சவம் நடைபெறுகிறது. உற்சவ நாள் முழுவதும் சுவாமி எழுந்தருளும்போது மாணிக்க வாசகர் எம்பெருமானே நோக்கியபடியே எழுந்தருளு வார். ஆனி மகத்தில் மாணிக்கவாசகர் உற்சவம் நடைபெறுகிறது. மாணிக்கவாசகரை எழுந்தருளப் பண்ணி ஊர்வலம் வந்த பிறகு சந்நிதிக்கு முன் கொணர்ந்து ஐக்கியமாவதாகப் ப வித் துத் தீபாராதன செய்கிருர்கள்.