பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 வாருங்கள் பார்க்கலாம் கோயில் வாயிலில் மணிவாசகர் அமர்ந்த திருக் கோலத்தில் வீற்றிருக்கிருர். வலக்கையில் ருத்தி ராட்ச மாலையைத் தரித்திருக்கிருர். இடக் கரத்தை மடிமீது கிடத்தியிருக்கிருர், பெரும்பாலும் மாணிக்க வாசகர் இடக் கரத்தில் சுவடியை வைத்திருக்கும் கோலத்தில் இருப்பதே வழக்கம். இங்கேயுள்ள தோற்றம் புதியதாக இருக்கிறது. சில சைன விக்கிர கங்கள் மடியின்மீது திருக்கரத்தைக் கிடத்தி வைத் திருக்கும் கோலத்தில் இருக்கின்றன. இந்த உருவத் திலோ வலக் கையில் ஜபமாலை இருக்கிறது. 'எந்தச் சமயத்தில், இவ்வாறு மாணிக்கவாசகர் இருந்திருப்பார்? என்று யோசித்தேன். திருவாசகத்தைச் சுவடியில் எழுதிய பிறகு மணி வாசகர் அதனைத் தம் கையில் வைத்திருக்க வேண்டும். அழகிய திருச்சிற்றம்பலமுடையானக் கண்ட பிறகே திருவாசகம் ஏட்டுச் சுவடியில் புகுந்து வடிவம் கொண்டது. மாணிக்கவாசகர் தவத்தில் அமர்ந்திருந்த இடம் இது. இங்கேதான் சிவ பெருமான் வந்து திருவாசகத்தையும், திருக்கோவை யாரையும் எழுதிக்கொண்டான். இந்த நினைவு வந்தபோது அந்தக் காட்சியை உள்ளத்தே உருவாக்கிப் பார்த்தேன். மாணிக்க வாசகர் திருவாசகப் பாடல்களே ஒவ்வொன்ருக நினைவுக்குக் கொண்டு வருகிளுர். அமர்ந்தபடியே