பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏட்டில் ஏறிய வாசகம் 343 அடைவாக விளங்கும். ஆகையால் அதை முன்பு சொன்னேன். - அம்பலத்தாடி மடமும் வடக்குச் சந்நிதியி லிருந்து தில்லேயம்மன் கோயிலுக்குப் போகுமிடத்தில் தான் இருக்கிறது. அதை, பாத பூஜை ரீலயூரீ அம்பலத்தாடும் சுவாமிகள் மடாலயம்' என்று சொல் கிருர்கள். அது வீர சைவ மடம். இப்பொழுது மடாதிபதி புதுச்சேரியில் இருக்கிருர் அந்த மடத் தின் மூல ஆசாரியருடைய திருநாமம் அம்பலத்தாடு வார் என்பது. அவருடைய வரலாறு ஒன்றை அச்சிட் டிருக்கிருர்கள். கர்ண பரம்பரையாக மடத்தைச் சார்ந்தவர்களுக்குள்ளே வழங்குவதாகச் சொல்கிருர் கள். இப்போதுள்ள மடாதிபதிகள் எத்தனையாவது பட்டம் என்று தெரியவில்லை. ஹைதர் காலத்தில் இங்கே வந்த படை வீரர்கள் இந்த இடத்தில் குதிரைப் பந்தி அமைக்க வேண்டுமென்று சொன்னர் களாம். மடாதிபதி அதற்கு இணங்கவில்லை. ஆதலால் மடத்தையே இடித்து விட்டார்களாம். அப்போது மடாதிபதியும் அடியார்களும் பூஜை முதலியவற் றுடன் புதுச்சேரிக்குப் போய்விட்டார்களாம். அது முதல் பரம்பரையாக அங்கே இருந்து வருகிருர்கள். சகாப்தம் ஆயிரத்து அறுநூற்று முப்பத்தேழாம் ஆண்டு (கி. பி. 1714) இங்கே சில திருப்பணிகள் நடந்ததைத் தெரிவிக்கும் கல்வெட்டு ஒன்று இருக்