பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வாருங்கள் பார்க்கலாம் இந்தக் கோயிலில் பல பழைய கல்வெட்டுகள் இருக்கின்றன. ஒரு சாசனம் இரண்டாம் குலோத்துங் கன் அரியணையேறிய நான்காம் ஆண்டில் பொறிக் கப் பெற்றது, சம்பந்தர் கோயிலில் தேவார ஏடுகளைப் பல காலமாக வைத்துப் பாதுகாத்து வந்தார்கள். அதைத் தினந்தோறும் பூசித்துக் காப்பாற்றுவதற். கென்றே ஒரு தமிழ் விரகர் இருந்தார். ஏடுகள் சிதிலம் அடைந்தால் மீட்டும் புதுப்பித்தார்கள். இந்தச் செலவுகளுக்காக நிலம் விட்டிருந்தார்கள். இந்தச் செய்திகளே அந்தச் சா ச ன ம் சொல்கிறது. தேவாரத்தை அருமையாக வைத்துக் காப்பாற்றிய முறை எத்தனே உயர்வாக இருக்கிறது ! இந்தக் கோயில் ஆட்சி தருமபுர ஆதீனத்தின் சார்பில் இருக்கிறது. அவ்வாதீனத்தைச் சார்ந்த தம்பிரான் சுவாமிகள் ஒருவர் கோயில் பரிபால னத்தை மேற்பார்த்து வருகிருர். அவரைப் பார்த். தாலே பழங்காலத்துத் தொண்டர்களுடைய நினைவு வரும். 1700 ஏக்கர் பூமியும் அரசாங்கம் உதவும் 2500 ரூபாய் ஆண்டு வருவாயும் இவ்வாலயத்தின் ஆட்சிக்குப் பயன்படுகின்றன. ஞானக் குழந்தையின் நினைவை உண்டாக்கும். திருத்தோணிபுரம் அன்று பிரளயத்தில் மிதந்தது. இன்றும் தேவார திருவாசகப் பனுவல்களிலே ஈடுபட்டுத் திருஞான சம்பந்தருடைய பெருமையிலே ஊறிய உள்ளங்களில் எல்லா நினைவுகளையும் அழுத்தி விட்டுத் தோணிபுரம் மேலே மிதந்து கொண்டுதான் இருக்கிறது.