பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வாருங்கள் பார்க்கலாம் பாணிக்கிரகணம் ஆயிற்று. தீயை வலம் செய்ய வேண்டும். ஞானக்கினியாக இருப்பவர் சிவ பெருமானே; அவரை வலஞ் செய்யப் போகலாம்: என்று சொல்லித் தம் மனைவியின் திருக்கரத்தைப் பற்றிக்கொண்டு கோயிலே நோக்கி நடந்தார் ஞான சம்பந்தர். அவர் மனத்துக்குள், இந்த இல்லொழுக் கம் வந்து சூழ்ந்ததே! இனி என் செய்வேன்! இவளோடும் சிவபெருமான் திருவடியை அடை வேன்' என்று எண்ணி நேரே கோயிலுக்குச் சென்றர். திருமணக் கூட்டம் முழுவதும் உடன் சென்றது. சிவபிரான் சந்நிதியை அடைந்த சம்பந்தர் தம் கருத்தில், இனி எனக்கு விடுதலே வேண்டும் என்ற வேட்கை மீதுர, "நல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்' என்று ஆரம்பிக்கும் திருப்பதிகத்தைப் பாடினர். அப்போது அங்கே ஒருபெருஞ் சோதிப் பிழம்பு தோன்றியது. "நீயும் உன் மனைவியும் மணத்திற்கு வந்தவர்கள் யாவரும் இந்தச் சோ தி க் கு ள் புகுங்கள்’ என்று ஓர் அசரீரி வாக்கு வானில் எழுந்தது. அந்தப் பெருஞ் சோதியினிடையே ஒரு வாயில் தோன்றிற்று. அதைக் கண்ட ஞானசம்பந்தர், காத லாகிக் கசிந்து கண் ணிர்மல்கி ஒது வார்தமை கன்னெறிக் குய்ப்பது வேதம் கான்கினும் மெய்ப்பொருள் ஆவது காதன் நாமம் கமச்சி வாயவே என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினர்.