பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதியும் வீதியும் 39 சுட்டிக் காட்டுகிருர் என்று தெரியாமல், "எதைப் பார்க்கச் சொல்கிறீர்கள்?’ என்றேன். "அதோ தலை கீழாய் நிற்கிற உருவம். நான் பார்த்தேன். - 'காக புசுண்டர் என்ற முனிவரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? "அவர் பேரால் ஒரு நாடி சாஸ்திரம் இருக்கிறது தெரியும்.” "அவர் இந்தத் தலத்துக்கு வந்தாராம். கைலையிலிருந்து வந்தவர் இறைவன் ஆணேயின் படி திருஞானசம்பந்தர் திருமணத்தில் முக்தி பெறலாம் என்ற எண்ணத்தோடு நெடுங்காலத்துக்கு முன்பு இங்கே வந்தார். இத் தலத்தின் பெருமையை உணர்ந்து இங்கே தலைகீழாக நடந்து வந்தார். தலைகீழாக இருந்து தவம் செய்தார். அவர் பிரதிஷ்டை செய்த யோகீசர் என்ற சுவாமி கோயில் ஒன்று இவ்வூரில் இருக்கிறது. காகமா முனிவர் ஞான. சம்பந்தர் இங்கே வரும்வரையில் தலைகீழாக நின்று காத்திருந்து சோதியில் கலந்தார்.” இந்தத் தலத்தில் பஞ்சாட்சரம், திருநீறு இரண் டுக்கும் மகிமை அதிகம். இறைவன் தன் சூலத்தைக் குத்தி ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி அதில் தன் சடையிலுள்ள கங்கையிலிருந்து புனலே நிரப்பிப் பஞ்சாட்சரத்தை ஆவாகனம் செய்தான். அதனுல் பஞ்சாட்சர தீர்த்தம் என்ற பெயர் வந்ததாம். யாவரும் ச்ோதியிலே புகுவதற்கு முன் இத்தீர்த்தக் கரையில் அம்பிகை எழுந்தருளி யாவருக்கும்