பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.46 வாருங்கள் பார்க்கலாம் கருப்பந்தோட்டம் மிகச்சிறப்பான வளம் பெற்று விளங்குகிறது. > வயல்களில் முதிர்ந்து விளைந்த கரும்புகளைத் தொழிலாளிகள் வெட்டுகிறர்கள். அப்படி வெட்டின இடங்களிலிருந்து கொழுஞ்சாறு ஊற்றெடுத்தாற். போல வருகிறது. அங்கங்கே தேனடைகளில் உள்ளே தேனும் விழுந்து அந்தக் கருப்பஞ்சாறு வெள்ளமாகப் பரந்து வண்டுகள் ஒலிக்கும்படியாகப் பாய்கிறது, புதுவெள்ளத்தைப் போல மடையை உடைக்கிறது. அதை உழவர்கள் காண்கிருர்கள். உடைந்த மடையை அடைக்க நறுக்கென்று கைக்கு ஒன்றும் அகப்படவில்லை. அங்கங்கே ஆலைகளில் கருப்பஞ்சாற்றைக் காய்ச்சி வெல்லமாகவும் கற்கண் டாகவும் குவித்திருக்கிருர்கள். அந்தக் கற்கண்டுக் கட்டிகளே எடுத்து, உடைந்த மடையை அடைக் கிருர்களாம். இந்த வருணனை கற்பனை என்னும் பூதக் கண்ணுடியினுல் கண்டு பாடியது. ஆலுைம் இந்தப் பக்கங்களில் கரும்பு வளம் நெடு நாளாக இருந்து வருகிறது என்று உண்மையை அது தெரிவிக்கிறது. "இப்படிச் சேக்கிழார் இங்கே எதற்காகப் பாட வேண்டும் ? என்று என் மூளையைக் கொஞ்சம் குடைந்து கொண்டேன். நாட்டு வருணனையானுலும் அங்கே நிகழும் நிகழ்ச்சியினல் பின் உள்ள கதைக் குப் பொருத்தமான குறிப்பு ஒன்று வெளியாகும்படி அமைப்பது பெருங் கவிஞர்களின் வழக்கம். அப்படி ஏதேனும் குறிப்பை,இந்தக் கரும்பு வருணனை காட்டு கிறதோ என்று சிந்தித்துப் பார்த்தேன்.