பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பர் உதித்த ஊர் 4 / பாட்டை முதலில் பார்க்கலாம். கடைஞர்மிடை வயற்குறைத்த கரும்புகுறை மொழிகொழுஞ்சாறு இடைதொடுத்த தேன்கிழிய இழிந்தொழுகு நீத்தமுடன் புடைபரக்து Dமிருெலிப்பப் புதுப்புனல்போல் மடை உடைப்ப உடைமடை அக் கரும்படுகட் டியின் அடைப்ப ஊர்கள்தொறும் "உழவர்கள் நெருங்கிய வயலில் வெட்டிய கரும் பின் குறைப் பகுதிகள் பொழிகின்ற கொழுவிய கருப்பஞ்சாறு இடையிலே தேனிக்கள் வைத்த தேன் அடை கிழியும்படியாக விழுந்து ஒழுகுகின்ற தேன் வெள்ளத்துடன் பக்கங்களில் பரவி, வண்டுகள் முரலப் புது வெள்ளத்தைப்போல மடையை உடைக்க, அவ்வாறு உடையும் மடையைக் கருப்பஞ் சாற்றைக் காய்ச்சிய கற்கண்டுக் கட்டிகளால் ஊர்தோறும் அடைப்பார்கள்' என்பது இதன் பொருள். இது சேக்கிழார் திருநாவுக்கரசு நாயனுர் வரலாற்றை உரைக்கப் புகும்போது அவர் பிறந்த நாட்டைப்பற்றிச் சொல்லும் வருணனே. திருநாவுக் கரசர் கதையின் நிகழ்ச்சிக்கும் இந்தக் கரும்புத் தோட்ட நிகழ்ச்சிக்கும் ஏதாவது ஒப்புமை இருக் கிறதா?-யோசித்தேன். இருக்கிறது போலத் தோன்றிற்று. சொல்லட்டுமா?