பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பர் உதித்த ஊர் 53 சைவநெறி.ஏழுலகும் பாலிக்கும் தன்மையிஞல் தெய்வநெரீச்.சிவம்பெருக்கும் திருஆம் ஊர் திருவாமூர் என்று சேக்கிழார் பாடுகிருர், மலர்நீலம் வயல்காட்டும் : இமஞ்ஞலம் மதிகாட்டும்; அலர்டுே மறுகாட்டும் அணியூசல் பகைாட்டும்; புலம் லேம் இருள் காட்டும் பொழுதுழவர் ஒலிகாட்டும்; கலம்கீடு :ன காட்டும் - கரகாட்டப் பெருவளங்கள் என்று அழகாக அவர் ஊரின் வளத்தைப் பாடுகிருர். அவர் நல்ல முழு நிலா எறிக்கும் இரவிலே ஊரைப் பார்த்து இன்புறுகிருர், நிலவு கண்டு மலர்ந்த நீல மலர்களே வயல்கள் காட்டுகின்றன. வான்மதியும் சிறிய, கறுப்பைத் தன்னிடத்திலே காட்டுகிறது. மலர் நிறைந்திருக்கும் வீதியில் அலங்காரமான ஊஞ்சல் போட்டு ஆடுகிருர்கள். ஆயிற்று; இரவு ஒருவாறு விடியப்போகிறது; அப்போது அதிக இருளாக இருக் கிறது. அந்த விடியற்காலேயில் உழவர்கள் கழனிகளே நோக்கிச் செல்கிருர்கள். அவர்களுடைய ஒலி கேட் கிறது. புலரும் பொழுதானது அந்த ஒலியைக் காட்டு கிறது. வீடுகளில் அணிகலன்கள். நிறைந்திருக் கின்றன. அவை மட்டுமா? இன்னும் எத்தனையோ பண்டங்கள் உண்டு. கரையில்லாத பெருவளங்களை அந்த மனேகள் காட்டுகின்றன.