பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வாருங்கள் பார்க்கலாம் உண்டு. சமீப காலத்தில் அமைத்ததென்று அந்தத் திருமேனியின் நிலையே சொல்கிறது. அப்பர் திருவவதாரம் செய்தது பங்குனி மாதம், ரோகிணி நட்சத்திரம். பெரும்பாலும் அப்பர் முத்தி, பெற்ற நட்சத்திரமாகிய சித்திரைச் ச த ய த், தில்தான் அவர் விழாவைக் கொண்டாடுகிறர்கள். ஆனல் திருவாமூருக்குப் பெருமை அங்கே அவர் பிறந்த்துதானே? அதஞல் அவர் பிறந்த பங்குனி ரோகிணியன்று அங்கே அப்பருக்குத் திருவிழா நடை. பெறுகிறது. சித்திரைச் சதயத்திலும் உற்சவம் உண்டாம். திலகவதியார் முத்தி பெற்றது தை, மாதம் உத்தர நட்சத்திரம். பங்குனி உத்தரத்தில் முருகனே எழுந்தருளச் செய்வித்துத் தெப்பத் திருவிழா நடத்துகிருர்கள். திருக்கோயிலுக்கு எதிரே உள்ள தீர்த்தத்தில் தெப்பம் நடைபெறுகிறது. அந்தத் தீர்த்தத்தை அப்பர். வெட்டுவித்தார் என்று சொல்கிருர்கள். பழங்: காலத்தில் அது நான்கு புறமும் நல்ல படித்துறை களோடு இருந்திருக்க வேண்டும். படிக்கட்டுகள்: சில அங்கங்கே இருந்து அந்தப் பழமையை நினைப் பூட்டிக்கொண்டிருக்கின்றன. பண்ணுருட்டிக்கும் இதற்கும் ஐந்து மைல் தூரம், இந்தத் தலத்துக்கு வெளியூரிலிருந்து வந்து தரிசிப்பவர்கள்'மிக அருமை. அப்பர் சுவாமிகள் திருவருள்பெற்ற திருவதிகையை அறியாத சைவர் இல்லை. அங்கே ஆலயமும் சிறப்பாக இருக்கிறது. ஆனல் அவர் திருவவதாரம் செய்த ஊரும், அங்குள்ள கோயிலும் கவ்னிப்பார் இல்லர்ம்ல் ஒரு