பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பர் உதித்த ஊர் 5; மூலையில் இருக்கின்றன. பதினைந்து ஏகரா நிலத்தை வைத்துக்கொண்டு ஊரில் உள்ள மூன்று தர்ம கர்த்தர்கள் ஆலயத்தை நிர்வகித்து வருகிருர்கள். வருகிற வரும்படியில் அரசாங்கத்துக்குப் பதினெட்டு ஞ்ப்ர்ய் கப்பம் வேறு செலுத்துகிருர்கள் 1 இந்தத் தலத்துக்குரிய தேவாரப் பதிகங்களில் ஒன்ருவது கிடைத்திருந்தால் இந்தக் கோயில் இப்படி இருக்குமா ? அப்பர் சுவாமிகளையும் திலகவதியாரையும் அளித்த திருவாமூர் சேக்கிழார் பாட்டையும் அருணகிரிநாதர் திருப்புகழையும் பெற்றிருக்கிறது. கோபுரம் இல்லை; தேர் இல்லை; பிராகாரங்கள் பல இல்லை; பேணி வளர்க்கச் சொத்து இல்லை. ஆலுைம் அதன் பெருமை குறை யுமா? அப்பர் திருவாய் திறந்து பாடிய இன்பக் குரலேக் கேட்ட இடங்கள் பல பல. ஆலுைம் அவர் உதயமானபோது அவருடைய முதற் குரலேக் கேட்ட ஊர் இதுதானே ? திரு அதிகை விடியற்கால நேரம் தருமசேனர் பாடலிபுத்திர நகரில் சைன மடத்தில் அமர்ந்திருந்தார். திருப்பா திரிப்புலியூரில் ஒரு பகுதியில் சைனர்கள் வாழ்ந்திருந் தனர். அந்தப் பகுதிக்குத்தான் பாடலிபுத்திரம் என்று பெயர். ! : * . . . . சைவ வேளாளர் குலத்தில் பிறந்து அறிவிலே சிறந்து நின்ருர் மருள்நீக்கியார். பல சமய நூல்களை யும் ஆராயும் ஆசை உண்டாயிற்று அவருக்கு. அக் காலத்தில் காஞ்சியிலிருந்து அரசாண்ட பல்லவன்