பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகைத் திருக்கோயில் அழகான மண் பொம்மைகளைப் பண்ணுருட்டி யில் செய்து வந்தார்கள். மண்ணுருட்டிப் பொம்மை செய்யும் பண்ணுருட்டி” என்று யாரோ எதுகை நயம் தோன்றச் சொன்னது இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது. திருவதிகைஇந்தப் பண்ணுருட் டிக்கு முக்கால் மைல் துரத்தில்தான் இருக்கிறது. பண்ணுருட்டியில் இப்போது பொம்மை செய்கிருர் களோ இல்லையோ எனக்குத் தெரியாது. அதற்கு அருகில் உள்ள திருவதிகையில் இ ைற வ ன் எழுந்தருளியிருக்கும் இடத்துக்கு மேல் உள்ள விமா னத்தில் பல அழகிய சுதை உருவங்களேக் கண்ட போது பண்ணுருட்டிக் கலைஞர்கள்தாம் இவற்றைப் பழங்காலத்தில் சமைத்தார்களோ என்ற எண்ணம் உண்டாயிற்று. பெரும்பாலும் மற்ற இடங்களில் கர்ப்பக் கிருகத்தின்மேல் விமானமும் அதில் வண்ண உருவங்களும் இருக்கும். இங்கேயோ கீழிருந்தே கதை வடிவங்களே அமைத்திருக்கிருர்கள். விமானத்துக்குப் போவதற்கு முன் மற்ற இடங் களேயெல்லாம் பார்க்க வேண்டாமா ? நின்று நிதான மாக இன்று திருவதிகையைத் தரிசிக்கலாமே. இதுதான் கோயிலுக்கு முன் உள்ள தென் வடல் விதி. கோயில் கிழக்கு நோக்கிய சந்நிதியை உடையது. கோபுரத்துக்கு முன்னலே உயரமான கல் மண்டபம் ஒன்று இருக்கிறது. சற்றே அண்ணுந்து பாருங்கள். மண்டபத்தின் முகப்பைப் பார்த்தீர்களா?