பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகைத் திருக்கோயில் $t குச் சூல தீர்த்தம் என்று பெயர். அப்பர் சுவாமிகள் இந்தத் தீர்த்தத்திலிருந்து நீரை உட்கொண்டு சூலை நோய் தீர்ந்தாராம். சூலைத் தீர்த்தம் என்றும் இதைச் சொல்லலாம் போல் இருக்கிறது. இங்கே நின்று மேற்கே பார்த்தால் மேற்குத் திருமாளிகைப் பத்தியில் ஆறு முகங்களோடு மயிலின் மேல் எழுந்தருளி யிருக்கும் முருகனத் தரிசிக்கலாம். அருணகிரிநாதர் இங்கே வந்து இப்பெருமானத் தரிசித்துத் திருப்புகழ் பாடியிருக்கிருர். - o வடக்குப் பிராகாரத்தைக் கடந்து மீட்டும் கிழக் குப் பிராகாரத்தை அடைகிருேம். தெற்குப் பக்கத் திலுள்ள படிகளில் ஏறிக் கோயிலுக்குள் போகலாம். இதோ எதிரே தெற்கே நோக்கியபடி எழுந்தருளி யிருப்பவர்தாம் திரிபுர சங்கார மூர்த்தி, உற் வ மூர்த்தி. நாலு திருக்கரமும், வேலும், அம்பும் கொண்டு விளங்குகிருர். வைகாசி மாதம் நடை பெறும் உற்சவத்தில் இந்தப் பெருமான்தான் திருத் தேரில் எழுந்தருளுவார். முன்பும் பூமியாகிய தேரில் ஊர்ந்தவர் அல்லவா? கோயிலுக்கு முன்னே ஒரு சிறு மண்டபம் இருக்கிறது. இதுதான் அலங்கார மண்டபம் போலும். இங்கே உற்சவ காலத்தில் பல கல்யாணங்கள் நடைபெறுகின்றன. ஏழைகள் பலர் சுருக்கமான செலவில் இங்கே வந்து திருமணங்களை நடத்திக்கொண்டு செல்கிறர்கள். இறைவனுக்குத் திருமணம் நடந்த பதி அல்லவா ? கோயிலுக்குள் இறைவன், திருவதிகையுடையா கிைய அதிகாபுரி நாதன் சிவலிங்கப் பெருமாளுக எழுந்தருளியிருக்கிருன் பதிஞ்று பட்டைகளையுடைய வா. பா. - 6