பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகைத் திருக்கோயில் 83 வேகாக் கொல்லை என்று பெயர் வந்தது. அங்கே மாத்திரம் மண் வெள்ளையாக இருக்கும்” என்று அவர் சொன்னர். "சுட்ட மண்ணு? எதற்குச் சுட்டார்கள்?' என்று ஆவலோடு கேட்டேன். "இறைவன் திரிபுர சங்காரம் செய்தபோது நெற்றிக் கண்ணுல் சுடப்பட்ட இடம் இது. அதற்குத் தப்பி வேகாமல் இருந்த இடம் அது' என்று விளக் கினர் அந்த அன்பர். r இ ைற வ னு ைடய திருவிளையாடல்களைப் புராணத்திலும் காவியத்திலும் தோத்திரத்திலும் வைத்துப் போற்றி வருவதோடு, இயற்கையிலும் செயற்கையிலும் உள்ள இடங்களிலும் அவற்றை நினைத்துப் பார்க்க வழி வகுத்து, கற்பனையிலும் சிந்தனையிலும் இறைவனைப் பல வகையில் வழிபட்டு வரும் மக்களின் பண்பை எண்ணிப் பார்த்து வியந் தேன். இறைவன் கண் பார்வை பட்டுச் சுட்ட மண் செம்மையான மண்; அது படாத மண் வெள்ளை மண்!- நல்ல கற்பனை அல்லவா? அப்பர் சுவாமிகள் சுட்டுச் செம்மையான மண் போலும்!