பக்கம்:வார்த்தை வாசல்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன் ஆது

ஒவியத்தால் அழகுவரும் : மாந்தர் உண்ணும்

உணவதல்ை உடல்செழிக்கும் உறுதி சேரும் ; ஆவியொத்த காதலினல் அணுக்கள் தோறும்

அமுதுாறும் வாழ்நாளும் வளரும்: நல்ல காவியத்தால் புலனின்பம் பெருகும் ; கல்விக் கனவுவரும் ; விழிவிடு வெளிச்ச மாகும் ; பாவியொத்தோன் என்ருலும் , அவனேப் பற்றிப்

பாடிவிட்டால் இலக்கியத்தில் நிலைத்து நிற்பான்.

சிவன்பெரியோன் என்றுரைப்பர் சைவர். இல்லை

திருமாலே மிகப்பெரியோன் என்பர் மற்ருே.ர். அவன்பெரியோன் இவன்பெரியோன் என்னும் சத்தம்

அரசியலில் அன்ருடம் எழுந்திட் டாலும், எவன்பெரியோன் எனக்கேட்டால், உலகம் போற்றும்

இலக்கியங்கள் படைப்பவனே பெரியோன் ஆவான். எவன்பெரியோன் என்ரு லும் ஒழுக்கம் வேண்டும். ஏனென்ருல் ஒழுக்கந்தான் வாழ்வின் வாசல்.

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/18&oldid=645707" இலிருந்து மீள்விக்கப்பட்டது