பக்கம்:வார்த்தை வாசல்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிஞ்சுபுகழ் மாயூரம் முனிசிப் பாட்டும் ;

விதிவகுத்த வடலூரார் பெய்த பாட்டும் : செஞ்சிநகர் ஏகாம்பர முதலி யாரின்

சீர்திருத்தக் கும்மிகளும் ; சந்தப் பாட்டும் ; பஞ்சுபடும் பாடுபட்ட சுப்ர மண்ய

பாரதியின் பாடல்களும் ; பாவின் வேந்தர் கொஞ்சு:தமிழ்ப் பாடல்களும்; இந்த நாட்டின்

கூனலுக்கு மருத்துவமாம் ; நல்ல தீர்ப்பாம் !

பிட்டுக்கு மண்சுமந்த கதையும் ; தெய்வம்

பிரம் பொன்ருல் அடிபட்ட கதையும் , யாப்பாம் கட்டுக்குள் அடங்குவதால், பழமை பேசும்

காவியத்தால் நமக்கென்ன நன்மை ? நீண்ட நெட்டிக்கு நாம்பூசும் புதிய சாயம்

நீடித்தா நிலைத்திருக்கும் மலடிப் பாடல் பட்டுப்போய்க் கெட்டுப்போய் விடுமே யன்றிப்

பாராட்டோ செல்வாக்கோ பெறுவ தில்லை.

பாவேந்தன் குடிசையிலே குடியி ருப்பான்.

பாட்டிருக்கும் , அவ்ன்கரத்தில் சீட்டி ருக்கும். கோவேந்தன் கோட்டையிலே குடியி ருப்பான்.

கோலிருக்கும் ; அவன்கரத்தில் வேலி ருக்கும். மூவேந்தன் எனுமிந்தக் கவிஞர் கையில்

முனைமுறியா வேவில்லை எனினும், என்றும் நாவேந்தும் தமிழுண்டு வீர முண்டு !

நன்ருகக் கவியெழுதும் ஆற்ற லுண்டு.

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/19&oldid=645709" இலிருந்து மீள்விக்கப்பட்டது