பக்கம்:வார்த்தை வாசல்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிகப்பயன் அளிக்கும் செய்யுள்

விளையாடும் இந்த நூலைத் தொகுத்தவர் மூவர்; பாடல்

தொடுத்தவர் முப்பத் தைவர். முகத்தையும், காதல் பேச்சின்

முடிவையும் குறிக்கத் தக்க சுகத்துறைப் பாடல் இந்தத்

தொகுப்பினில் சிறிது மில்லை.

முகப்பினில் ஞாயி றுண்டு;

முழுநீல வான வட்டம் நகர்த்திடும் நிலவு முண்டு;

ஞானக்கண் பாட லுண்டு; நுகத்தடி ஒட்டைக் குள்ளே

நுழைத்திடும் கயிற்றைப் போன்று மகத்துவம் பேசி ஏய்க்கும்

வஞ்சகப் பாட வில்லை.

சுற்றியே வளைத்துப் பேசும்

தொன்மொழி வல்லோர், ஈரம் வற்றியே செத்துப் போன -

மரத்தினை வானம் என்ருர்.' மற்றதை ஒருவர் இங்கே

மரப்பிணம் என்று கூறிக் .கற்பனைக் குதிரை பூட்டிக் - கவிதைத்தேர் ஒட்டி யுள்ளார்.

78.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/80&oldid=645832" இலிருந்து மீள்விக்கப்பட்டது