பக்கம்:வாளும் கேடயமும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பெண் செய்தாலும் சரி' என்று நிர்ணயிக்கின்ற அளவிற்கு அந்தக் குழு தன்னுடைய ஆய்வை நடத்தி விரைவில் ஒரு முடிவினைத் தரும்; அது, அரசின் சார்பில் பரிசீலிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாசன வசதிகளைப் பெருக்கினோம் ! ஆறாவது அம்சமாக- "உழவுத் தொழிலையும், தொழில் உற்பத்தியையும் பெருக்க நீரும், மின்சாரமும் இன்றியமையாதன; குறைந்தது 50 இலட்சம் ஹெக்டர் நிலத்தை யேனும் விரைவில் சாகுபடிக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்” என்பதாகும். ஐம்பது இலட்சம் ஹெக்டர் என்றால், ஒன்றேகால் கோடி ஏக்கா : இந்தியாவில் ஒன்றேகால் கோடி ஏக்கர் புதிய பாசன வசதிகளைப் பெற இந்திரா காந்தி அவர்கள் நடவடிக்கை எடுக்க முனைந்திருப்பது பாராட்டக்கூடிய அம்சமாகும்; ஏனென்றால், இந்தியா வேளாண்மைத் தொழிலைப் பெரிதும் ம்பியிருக்கின்ற ஒரு பெரும் பூபாகமாகும். இப்படிப்பட்ட இடத்தில், மற்ற தொழிலுக்கு மேலாக வேளாண்மைத் தொழிலுக்கு முதலிடம் தர வேண்டும்; இரு த்தெட்டாண்டுக் காலச் சுதந்திரத்திற்குப் பி பிறகாவது ணர்ந்து, 'பாசன வசதிகளைப் பெருக்க வேண்டும்' என் தொரு நல்ல முடிவை இருபது அம்சத்தின் மூலமாக அறிவித்த இந்திரா காந்தி அம்மையார் அவர்களைப் பாராட்டக் கடமைப் யட்டிருக்கிறேன். ஒரு விவரத்தை 1947-ஆம் 80 ற மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஆண்டு வரை பாண்டியர்கள், சேரர்கள், சோழர்கள், பல்லவர்கள் என்றெல்லாம் பல் மன்னர்கள் ஆண்டு வெள்ளையர்கள் ஆண்டு முடித்த 1947 வரை-- தமிழ்நாட்டில் பாசன வசதி பெற்ற நிலம் சுமார் நாற்பத்துநான்கு இலட்சம் ஏக்கராகும்; அந்தப் பழம் பெரும் மன்னர்களுக்குப் பிறகு - பறங்கியர்களுக்குப் பிறகு- பெரியவர் பக்தவத்சலம் ஆண்டு முடித்த 1967 வரையில் - இருபதாண்டுக் காலத்தில் -- மேலும் எட்டு இலட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்றது. - - 8-