பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி

சாமியின் இருதயம் நைந்துவிட்டது. சின்னச்சாமி வாழ

முடியாதவன். காந்தா அவனுால் வாழவைக்கப்பட முடியாத

வள்.

ம்

மன அலைகளால் மயங்கிப் போயிருந்த அந்தத் துயர உருவம் திடீரென விரலில்பட்ட பீடியின் நெருப்பால் உணர்ச்சி பெற்றுத் திடுக்கிட்டது. நிலாவும் மேகத்தில் மறைந்து கொள்ளவே சின்னச் சாயி, ஒரு பெருமூச்சோடு எழுந்தான். கதவை தாளிட்டுவிட்டு விளக்கைக் கொஞ்சமாக அடக்கி விட்டு அந்தக்கிழிந்த பாயில் படுத்துக்கொண்டான். அவன் கண்களில் சோகம் படர்ந்திருந்தது காந்தா உடம்பை நெளித்துக்கொண்டு சோம்பல் முறித்த திலிருந்து அவளுடைய இருதயத்திலும் ஒரு பெரும் போராட்டம் UTITLLL நடந்திருக்கத்தான் வேண்டும் என் பது தெளிவாகத் தெரிகிறது.

வாழ்நாளின் வனப்புமிக்க ஒரு பகுதி வீணே கழிவதென்றால் ?.... கொஞ்சு மொழியும் கோலாகல மும் அனுபவிக்க வேண்டிய பருவத்தில் ஊமையாக முடங்கிக் கிடப்பதென்றால்?.... காதல் கீதத்திற் கேற்ற இன்ப கேளிக்கை யாடவேண்டிய இளமை நாட்கள், நொண்டியாகி விடுவதென்றால் ?... எந்தப் பெண்ணால்தான் தாங்கிக்கொள்ள இயலும் அந்த வேதனையை!

இந்த இருண்ட உலகில் ஒரு மனித ஜந்துவின் வீடு. அங்கே இரண்டு கிழிந்த பாய்கள். பாயைவிட அதிகமாகக் கிழிந்துபோன இரண்டு உள்ளங்கள்!

11