.
ண்
மு. கருணநிதி
இருக்கணும். அசல்மாதிரி. ஆமாம், சொல்லிவிட் டேன். செண்பகம் சிரிக்கிறான் பார் குழந்தை. என் கண்ணுப்பயலே ஒரு கட்டி முத்தம் கொடு.வெள்ளி யிலே உனக்கு ஒரு மோட்டார். தங்கத்திலே குதிரை. வைரத்திலே சின்ன சைக்கிள் போதுமா? போதாதா? சரி...... ரத்தினத்தில் ஒரு
தொட்டில். என் கண்ணுக்குட்டி சிரிக்காதே... செண்பகம்... நம் அய்யரின் அவிர்ப்பாகத்தின் மகிமையே மகிமை..."
"என்ன புலம்புகிறீர்கள்" என்று அலறியடித் துக்கொண்டு எழுந்தாள் பக்கத்தில் படுத்திருந்த செண்பகவல்லி.
"ஒன்றுமில்லை" என்று கண்ணைக் கசக்கினார், கனவில் சொக்கியிருந்த ஜெமீன்தார். அதே இரவு LD மாரியம்மன் கோயில் பக்கம் பயங்கரமான இருள், பணக்காரன் நெஞ்சம்போல !-வானம் கருப்பு மழை பொழிவது போன்ற காட்சி. இடையிடையே மின்னலின் வைர வெட்டுக்கள் சில தீக்கோடுகள் கிழிக்கின்றன. அந்தத் திடீர் வெளிச்சத்தில்... ஓர் உருவம் அசைவது தெரிகிறது. கைகால்கள் இரண் டிரண்டு தான் ! அதனால் அது மாரியின் உலவல் அல்ல. உருவம் கோயில் கதவண்டைவந்து நிற்கிறது. கதவு திறக்கப்படுகிறது. உருவம் கர்ப்பக் கிரகத்தில் நுழைகிறது. ஜெமீன்தார் செய்துவைத்த பொன் விளக்கின் ஒளியில் - அந்த உருவம், பூசாரி மருத முத்துதான் என்று கண்டு பிடிக்க முடிகிறது.
விளக்கு அணைகிறது.
23
16