பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணுநிதி

யிரேமாவின் பெரு மூச்சிலே இருந்ததுபோல. உல கத்தைக் கவிழ்க்கக் கங்கணங் கட்டிக்கொண்ட ஒரு பூகம்பத்தைப்போல அவளது இதயங் குலுங்

கிற்று.

ற்று.

பிரேமாவுக்கும் குழந்தை கோகிலாவுக்கும் நடு விலே ஒரு மெல்லிய மின்சாரக் கம்பி ஓற்று பிரேமா சில விநாடிகள் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.

து

குழந்தை கோகிலா பேசுவது போலிருந்தது. ஏதோ கதை சொல்வதுபோல் தெரிந்தது. பிரேமா அந்தக் கதையைக் கேட்டாள். அவள் மட்டும்தான் அந்தக் கதையைக் கேட்க முடியும். மூன் று மாதக் குழந்தை சொன்ன வரலாற்றிலே சற்று லயித் தாள்! கோகிலாவின் கொவ்வை இதழ்கள் அசைந் தன கதை ஆரம்பமாயிற்று.

பிரேமாவுக்கு வயது 15! நல்ல அழகி என்று ஊரார் சொல்லுவார்கள். அவளும் தன்னைக் கண் ணாடியில் பார்க்கும் போதெல்லாம் சிறிது கர்வமடை வது வழக்கம்.

"பிரேமா! ஆமாம் பிரேமாதான் ! மிருதுவான பேச்சுக் காரியே ஒழியப் பாகுமொழி பேசி, பழி வாங்கும் பத்திரகாளியல்ல ! பிரேமையைக் கீதமாக மாற்றிப் பேசுகிறாள். இன்பத்தைப் பூசியிருக்கும் இரண்டு இதழ்கள் ! ஒளியை மொண்டு நிற்கும் கண் கள் ! வாழ்வில் ஜீவநாடியே பிரேமா என்ற வார் --எண்ணங்களை அசைக்கும் தென்றல்

29

..