மு. கருணாநிதி
கேட்பாரற்றுப் போயின. பிறந்த சிசுவைத் தூக் கிக்கொண்டு பிரேமா வெளிக் கிளம்பினாள். அப் பொழுதுதான் அவளது மாஜி மாஜி மாமனார் வரதாச் சாரி விதி விளையாடுகிறது என்று கூறினார். தேச பக்தர் தெய்வசிகாமணி சுதந்திரமில்லாக் கோளாறு சொன்னார். பொதுவுடைமைப் பொம்மு ராயர் பொருளாதார ஸ்தம்பனம் எனப் புகன்றார்.
என
பிரேமாவுக்கு இரங்குபவர் யாருமில்லை. "திமிர் கொண்ட சிறுக்கி அய்யங்கார் மகனைக் கெடுத்தது மில்லாமல் குழந்தையை வேறு தூக்கிக்கொண்டு பாச குடி கெடுக்கவோ அலைகிறாள்" என்று ன்று ஊர் உளறிற்று.
கண்ணபிரான் செய்த க விபசாரம் வெளிவர வில்லை. ஆண்மையால் அது மறைக்கப்பட்டு விட்டது. அதற்கு ஜாதித்திரையும் விடப்பட்டது. தீர்த்த வீட்டுக் வீட்டுக் கமலா கமலா சாந்தாராமை ஏமாற்றி வேறொருவனை மணந்தது விபசாரம் என்று கூறப் படவில்லை. காரணம் கமலா வீட்டுத்தயவு பலருக்கு வேண்டியிருந்தது.
பிரேமா ஒரு திக்கற்ற ஏழை! அவள் மட்டும் விபசாரியாக்கப்பட்டு விட்டாள். விபசாரத்திற்கு விளக்கந்தர அவள் கையிலே ஒரு குழந்தை. ஆனால் கழுத்திலே தாலி இல்லை.
ע
கமலா சாந்தாராமின் ஆசைக்குரியவளாக, அணைப்புக்குரியவளாக இருந்தது தெரியாத்தனம்! பிரேமா கண்ணபிரானை நெஞ்சாரக் காதலித்தது மட்டும் விபசாரத்தனம்! கண்ணபிரான் பிரேமாவை
35
து