பிள்ளையோ பிள்ளை !
ஏமாற்றியது ஜாதிப்பெருமை - சமூகப்பாதுகாப்பு. சாந்தாராம் கமலாவைக் காதலித்தது மட்டும் சண் டாளத்தனம்-இது ஊரார் தீர்மானம். ஏன்? உல கமே அப்படித்தானே. இங்கே நல்ல தீர்ப்பு ஏது? ?
மளிகைக் கடையில் சாமான் வாங்கும் சாதார ணப் பேர்வழி கொஞ்சம் உளுந்தை எடுத்துத் தன் கூடையில் போட்டுக் கொண்டால் அது திருட்டு. கூடைக்காரன் முக்கால் மணங்கை முழு மணங்காக அளந்தால் அது வியாபாரத் தந்திரம்!
ல்
சாதாரண மனிதன் பொய் சொன்னால் அது பஞ்சமா பாதகம். வக்கீல் சொன்னால் திறமை!" குடிசையில் வாழும் குப்பன் குடித்துவிட்டு ஆடினால் அவனுக்குக் குடிகாரப்பட்டம். அதே காரியத்தை பெரிய மனிதர்கள் என்று பேசப்படுவோர் செய் தால் அது 'எஞ்சாய்மெண்ட்'
சாதாரண மனிதன் தன் மனைவியைப் பிறருக் குத்தானம் செய்தால் அது மானமற்ற காரியம்! தே வேலையை இயற்பகை நாயனார் செய்தால் அது பக்திப்பிரவாகம்.
பாஞ்சாலியைப் பத்தினி என்று சொல்லும் உல கந்தானே இது. இந்த உலகத்திலே பிரேமாவுக்கு. மட்டும் எங்கிருந்து நல்ல தீர்ப்பு வந்து குதிக்கும்? கமலா காதலனை ஏமாற்றினாள். கண்ணபிரான் பிரேமாமை ஏமாற்றினான். இதில் நடு நிலைமைத் தீர்ப்புக் கூற இந்தப் பாழும் சமுதாயம் சம்மதிக்க வில்லை. குழந்தையை வளர்த்தாக வேண்டுமே? இந்தக் கவலை பிரேமாவைக் எப்பிக்கொண்டது.
36
ம்