கருணாநிதி
குழந்தையின் கண்ணொளியில் பிரேமா கண்ணபி ரானைக் காண்பாள்: கண்ணீர் பெருக்குவாள். 'ஜாதித் திமிர்' என்று முணுமுணுப்பாள். மாண்ட தாயாரின் உபதேசம் நினைவுக்கு வரும். விதி! விதி என்று பலமுறை கூறுவாள்.
எங்கேயோ ஒருஊர்க் கடைத்தெருவில் பிரேமா குழந்தையுடன் செல்கிறாள். கடைத்தெருவில் தொங் கிய விளம்பரம் அவள் கவனத்தை
ய
5
இழுத்தது. அதன் விளைவாக "நாகரிக நாடகக் கம்பெனியில்" சேர்ந்தாள். அவளுக்கு இயற்கையாக அமைந்த சங்கீத ஞானம் பக்கபலமாக இருந்தது.
உலகைப்பற்றியே சரியாகத் தெரிந்து கொள் ளாத பிரேமா-விதியை நம்பி வாழ்ந்த பிரேமா- அய்யர் குலத்தை அமரர் குலமாகக் கருதியிருந்த பிரேமா- வெளுத்ததெல்லாம் பாலென எண்ணி விடும் பிரேமா-தற்கால நாடக உலகில் விபசாரக் கலையை வளர்க்கும் விஷ ஊற்றுக்கள் இருப்பதை எப்படி அறிவாள்.
இரண்டு மாதங்கள் நகர்ந்தன. பிரேமாவின் வாழ்க்கையின் இரண்டாவது அத்தியாயம் ஆரம்ப மாயிற்று. வேஷம் போட்டுக்கொள்ளும் பகுதி... புகழ் பரவும் பகுதி -மாலைகள் விழும் பகுதி என்ற முறையில் வாழ்க்கை ஏடுகள் புரண்டன. நாடக விளம்பரங்களில் 'பிரேமாபாயின்' பெயர் ஸ்பெஷல்வர் ணங்களால் எழுதப்பட்டன.
"பிரேமா இன்று உன் நடிப்பு பலே ஜோர். "ஆமாம் அப்படித்தான் சொன்னார்கள்."
37
J
256 D. V. 3 . 3