பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழை ழ

வழக்கபோல் பானுவின் தள்ளுவண்டி “பார்க்" நோக்கிப் புறப்பட்டது. பானுவின் சின்னஞ் சிறு வாயிலிருந்து சிதறிக் கொண்டே யிருக்கும் மழலை மொழிகட்குப் பதில் பேசியவாறு வண்டியைத் தள்ளிக்கொண்டு போனாள் பார்வதி. பானுவுக்கு வயது ஆறுகூட ஆகவில்லை. வீட்டில் துரு துரு' என்று சும்மாயிருப்பதில்லை. முக்கிய மாக அப்பா அம்மாவைப் பேச விடுவதில்லை யென்றால் பாருங்களேன்; காலையிருந்து கிராமக் கணக்கு வழக்கு, குத்தகைதார் பணம் பட்டுவாடா, கிசான் தொல்லை, வியாபாரப் பிரச்னை இவ்வள வையும் கவனித்துவிட்டு, மாலை ஆறு மணிக்கு மேல்தான் நல் கண்ணுப் பிள்ளைக்கு ஓய்வு. அந்த ஓய்வு நேரத்தில் ஒரு விநாடிகூட வீணாகப் போய்விடக் கூடாது என்பது பிள்ளையின் நோக் கம். ஆறுமணி எப்பொழுதுவரும் என்று எதிர் பார்த்திருக்கும் கருணாம்பாள்-- ஆமாம் அவரது மனைவி- அந்த அம்மையாரும் அந்த ஓயா உல்லா சத்தைத் தான் விரும்பினார்கள். அவர்களின் இனிய பொழுதை... அந்தத் தீராத விளையாட்டுப் பிள்ளை... தொடர்ச்சி கெடும்படி நடு நடுவே அறுத்துவிடும். என்னதான் புத்திரபாச யிருந் தாலும் சற்றுநேரம் யாருடைய தொந்தரவு மின்றி இருக்கத்தான் கருணாம்பாளின் மனம் விரும்பியது. அதுவுமென்ன? அந்தத் தம்பதிகள் ஏழைகளா? -இன்பம் என்ன நிறம் என்று கேட்க! குடிசை

41

T