பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழை

யாக உருவெடுக்கிறது. துடைப்பக் குச்சியை எடுத்துத் தூர எறிந்துவிட்டு...பார்வதியின் மூக்கில் அவனே அந்த ஆபரணத்தை அணிகிறான். கருத்த மேனியில் அந்த வெள்ளை மூக்குத்தி பளிச் சிடுவது, நீலவானத்தில் நிலா கிளம்புவதை நினை வூட்டுகிறது. "பார்வதி!... எங்கே?"....என்று அத் தான் உதடுகளை மொக்காக ஆக்குகிறான். பார்வதி யின் இதழ்களும் குவிகின்றன. மொட்டுகள் மோதி மலர்ந்து விடுகின்றன. 'சஞ்சீவி பர்வதத்தின் சாரல்'-ஒரு முக்கிய பகுதி நடந்தேறுகிறது.

கனவு மங்களம் பாடுகிறது. பார்வதி சுய நினைவு பெறுகிறாள். வண்டியில் பானு 'மழை வருது மழை வருது என்று பாட ஆரம்பித்து விடுகிறது. இரண்டு கனமான மழைத்துளிகள் பார்வதியின் முகத்தில் விழுந்து சிதறின.

உலகை அதிரச் செய்யும் இடிகள்--வான மனி தனின் அகோரச் சிரிப்பு-பயங்கரக் கண்வீச்சு- கடலைக் கவிழ்த்துவிட்டது போல மழை-இமயம் விந்தியத்தில் மோதிடுவது போன்ர

உருண்டு அதிர்ச்சி.

பார்வதிக்கு; பானு நனைந்துவிடுவாளே என்ற பயந்தான். பாவம் அந்த ஏழைக்கு எஜமான் வீட்டில் - இல்லை. இல்லை....குழந்தையின்மேல் அவ் வளவு பாசம். மனிதவர்க்கம் என்பது ஏழைக் கும் பல்தானே! பணக்கார மனிதர் மிருகக் கூட்டம். அதில் மனிதர்களும் தவறிப் பிறப்பதுண்டு. ஏழை மனிதர் குழுவில் துன்பம் தாங்கமாட்டாமல் மிருக

44