பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணுநிதி

மட்டும் உடைந்து விழுந்தது. காவற்காரர்களுக்கும் பொதுமக்களுக்கும் கை கலப்பு.

"டேய் பாரத யுத்தம்! என்றான் ஒரு கிண்டற் கார தடியன். இதற்குள் யாரோ ஒருவன் நெருப் யுக் குச்சிக்கும் வேலை கொடுத்துவிட்டான். "லங்கா தகனம்' நாடகம் ஆரம்பமாயிற்று. தீ வளர்ந்து, தாவியது. முதலாளியைக் காணவில்லை. காளிதேவி திரை தீப்பிடித்துக் கொண்டது. கொட்டகை முறிந்து எரிந்தபடி சாய்ந்தது. பக்கத்திலிருந்த வயற்புறத்தை நோக்கி நடிகர்கள் சிதறினர். ராஜ்,நடராஜ்'! என்று கத்திப்பார்த்தான் குமார். தன் உள்ளக் கோயில் கொண்ட அந்தக்குயில், வெந்து கருகிவிடுமோ என்ற குமுறல் எழுந்தது அவனுக்கு! என் கோமளவல்லி எங்கேயென ஓடி னான். அப்போதுதான் திரௌபதி சிங்காரிப்பு

நட

றையை விட்டுப் பறந்து கொண்டிருந்தாள். குமா ரும் தொடர்ந்தான்... கொட்டகையில் தீ! குமாரின் இதயமெல்லாம் தீ!....... அந்தத் தீ - தீங்கனியாக மாறப் போகிறதென்ற ஆசை அவனைக் காற்றாக் கிற்று. ஓடிக்கொண்டேயிருந்த திரௌபதி ஒரு வரப்பில் தடுக்கி விழுந்தாள். அவனும் விழுந்தான். அவன் இதயராணிக்குப் பேச்சு மூச்சில்லை. குமார் அவளைத் தன் மடியில் சாய்த்துக்கொண்டு அவள் கன்னங்களைத் தடவிக் கொடுத்தான். துண்டை எடுத்து முகத்தில் விசிறினான். நெஞ்சைத் தடவிக் கொடுத்தான். சில நிமிடங்கள்

து

மெளனம்.

51

ஆனந்