பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரிஜினலில் உள்ளபடி

வழியும் புராணங்களும் உங்கள் சிருஷ்டியாகின் றன. ஆமாம். மனிதர் கையில் அலைக்கழியும் கூட்டம்போலத்தான் இந்த எழுத்துக்

மலர்க் கூட்டமும்!"

அவன் இதய அலைகள் ஓய்ந்தன. எதையோ கண்டுபிடித்து விட்டவன்போல கந்தசாமி கண்களை விசாலமாய்த் திறந்தான். மீண்டும் கையில் இருந்த 'ஒரிஜினலை' ஒரு முறை பார்த்தான். அதில் ஒவ் வோர் எழுத்தும் அவனை உற்றுப் பார்த்தன; அவன் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்தன. வாய்க் குள் உளறினான். "மகா கும்பாபிஷேகம்.. ம் 2.....BL மட உலகம். அலட்சியம் நிறைந்த வெறுப்பு அவன் முகத்தில் கோடுகளைக் கிழித்தது. மீண்டும் தனக்குள் பேசிக் கொண்டான்.

99

"கொள்ளை யடிக்கிற செட்டிக்குக் கும்பாபி ஷேகம்!........ கும்மாளம் போட்டு ஊரைக்குட்டிச்சுவ ராக்குகிறான். இந்தக் குருடர்களும் நம்புகிறார்கள். எனக்குத் தெரியுமே......... இவன் ஏகாம்பரம் மனைவி பைக் கற்பழித்த கதை! பெரியண்ணப் படையாச்சி பிராணாவஸ்தையில் இருக்கும்போது அவர் வீட்டுப் பணப்பெட்டியை அமுக்கியதில்தானே இவன் வீட் டுக்குப் "பெரிய பண்ணை" பட்டம் கிடைத்தது! வேதாளபுரம், வெங்கடாசலபதி கிரீடத்தின் வைரங் களைப் பெயர்த்து விற்றதில்தானே விசாலமான வீடு கட்டினான். இவற்றை யெல்லாம் மறைக்கக் கும்பாபிஷேகம் செய்து விட்டால் போதுமா?....... அட படுபாவி! நரகம் என்று ஒன்று இருந்தால்

60