04
மு. கருணுநீ
உன் நரம்புக்கு நரம்பு ஒரு நாகப்பாம்பை விட்டுக் கடிக்கச் சொல்லணுமேடா!.... நீ கோயில் கட்ட வந்து விட்டாய்... கோயில்! ராமநாதன் செட்டி யாரே! இரு! இரு!...... ஒரு கை பார்கிறேன். உயிர் போனாலும் கவலையில்லை"
கந்தசாமியின் தலை கம்பீரமாய் நிமிர்ந்தது எதிரே நிற்கும் படைத் தலைவனைப் பார்த்து 'எடு வாளை என இறுமாந்து உரைக்கும் பண்டைய திராவிட வீரனைப் போலக் கந்தசாமி நின்றான். அவனுக்கெதிரே ராமநாதன் செட்டியார் நிற்ப தாக அவன் நினைவு!... பிறகு மளமள வென்று அச்சுக் கோக்க ஆரம்பித்தான். அவன் வாய் முணுமுணுத்துக்கொண்டே யிருந்தது.
ப
"என்ன கம்பாசிட்டர்' ஆச்சா?” என்று அதட்
டினார் மானேஜர் !"
99
அச்சுக்கோத்த " மாதிரித் தாளை எடுத்து நீட்டினான் கந்தசாமி.
அருமையான கட்டம், அழகான முறை - அந்த விளம்பரத் தாளின் அமைப்பே அலாதியாக இருங்
தது.
15
அச்சு நிலையத்து வாயிலில் கார் வந்து நின்றது. ராமநாதன் செட்டியார் இறங்கி வந்தார். "ஆச்சா? என்றார்;ஆவல் பார்வையுடன். 6 சில்க் சட்டையில் நிற்காமல்,வழுக்கிக் கீழே விழுந்த வெண்பட்டை எடுத்துச் செட்டியாரின் தோளில் போட்டு விட் டான், பின்னால் வந்த வேலைக்காரன் 1 அந்த அடிமையின் நிலை கண்ட கந்தசாமியின் தொண்டைக்
G
61