பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர்ஜினலில் உள்ளபடி !

6

ஒரே நையாண்டிச் சிரிப்பு. இடையே "காமநாதன் செட்டியாரே! போகாநந்த சுவாமிகள் எங்கே?" என்ற கேள்விகள். "பொருத்தமான பெயர்களப்பா ........... காம நாதன் -- போகாநந்தர்........" இப்படி ஒரு விமர்சனம். மீண்டும் கைதட்டலும் சிரிப்பும். 'கண்ட பெண்களைக் கற்பழிக்கும் காமநாதன் செட்டியாருக்கு" என்ற 'ஒற்றைக்குரல்' இதைத் தொடர்ந்து 'ஜே ஜே' கோஷம். இதற்குள் ஒன்றும் யுரியாத சிறுவர்கள் 'திரு திரு'வென விழிக்கும் செட்டியாரைப் பணக்காரப் பைத்தியமென் றெண்ணி வீசிய சிறுசிறு கற்கள் எல்லாம் சேர்ந்து பெரிய குழப்பத்தை ...... போலீஸாரின் குண்டாந் தடிப் பிரயோகம் வரையில் கொண்டுவந்துவிட்டன. ல் செட்டியாரின் முகத்தில் விளக்கெண்ணெய் வடிந் தது. "கும்பாபிஷேகமும் வேண்டாம், எழவும் வேண்டாம் திருப்புடா காரை" என்று கர்ஜித்தார். கார்கள் கல் மாரியோடு திரும்பின. செட்டியார் தோற்றோடுகிறார் என்ற நினைப்பில் மீண்டும் பலத்த கரகோஷம்!.......

து

லெக்னம்' தவறக்கூடாது என்ற சாஸ்திரிகள் களின் முடிவுப்படி செட்டியார் இல்லாமலேயே கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சி நிரலில் கண்டவாறு யோகானந்த சுவாமிகள் உபன்யாசத் திற்காகச் செட்டியார் வீட்டில் வந்து இறங்கினார். செட்டியார் சோன உருவமாகச் சாய்ந்திருந்தார். யோகானந்த சுவாமிகள் முகத்திலும் எள்ளும் கொள்ளும் வெடித்தன.

64