ஒரிஜினலில் உள்ளபடி
ராமநாதன் செட்டியார் எழுந்து அகோர நர்த்த னத்தை ஆரம்பித்துவிட்டார். பல்லைப் படபட வென்று கடித்துக்கொண்டார்.
"அச்சாபீசுக்காரன் உண்மையைத்தான் போட் டிருக்கிறான் " என்று (சொல்லவில்லை) தனக்குள் எண்ணிக்கொண்டார் கணக்கப்பிள்ளை.
தரவு.
"ஏய் டிரைவர் காரை எடு "-செட்டியார் உத்
வேதாந்தி பிரசின் முன்னே கார் நின்றது. மானேஜர் ரூம், யானைகள் புகுந்த வெண்கலக் கடையாயிற்று.
"ஏய்கம்பா சிட்டர்! டேய்" என்று உருத்திராகார மாக அழைத்தார் மானேஜர் வேலாயுதம் பிள்ளை. கம்பாசிட்டர் கந்தசாமி வந்து நின்றான்.
ஓங்கி ஓர் அறை - கந்தசாமி மானேஜரால் தாக்கப்பட்டான்; அடிபட்ட கத்தசாமி அழவு மில்லை ஆத்திரப்படவுமில்லை; சிரித்தான்.
என்னடா சிரிக்கிறாய்... தடிப்பயலே" மானே
ஜர் நோட்டீசை அவன் முகத்தில் எறிந்தார்.
"ஒன்றுமில்லை சார். ஒரிஜினலில் உள்ளபடியே அச்சுக் கோர்த்திருக்கிறேன்.'"
"ஒரிஜினலா? எதுடா ஒரிஜினல்! ஒரிஜினலில் பாஞ்சாலி விபசாரம் என்றுதான் போட் டிருக்கோ?”
'ஆமாம்... இதற்கு உண்மையான ஒரிஜினல் பாரதம்! இந்தக் கையெழுத்து கோட்டீஸ் அல்ல!...
66