பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணநீதி

நெஞ்சு. கம்பீரமான தோற்றம். கண்களிலே எப் போதும் சிவப்பு நிறம்.கறுப்பு குலையாத மீசைகள்.

காந்தா.... அவனுடைய வேகமான நடையோடு போட்டிபோட முடியாமல் திணறித் திணறிப் பின் தொடர்ந்தாள். நீண்ட சாலையின் ஓரத்தில் நெடுக நிழல் தரும் மரங்கள் நின்றிருந்தன. அங்கே ஒரு பெரிய புளியமரம். மனித நடமாட்டத்தில் அதன் கிளைகளில் இருந்த பறவைகள் அடிக்கடி சிறகை யடித்துக்கொண்டன. அந்த மரத்தின் பக்கமாகச் சின்னச்சாமி சாலையிலிருந்து இறங்கினான். சாலைக் குக் க கீழ்ப்புறமாகச் சிறிது தூரம் சென்றால் "போலீஸ் லைன் . அங்கே 18-வது எண்ணுள்ள வீடு சின்னச்சாமி யுடையது.

"காந்தா ! கீழே பார்த்து வா. பூச்சி பொட்டு இருக்கும்.

இதைச் சொல்லியபடி கொஞ்சம் மெதுவாக நடந்தான், பின்னால் திரும்பிப் பார்த்தபடி. வீட்டை யடைந்ததும் சின்னச்சாமி பூட்டைத் திறந்துவிட்டு, நெருப்புக் குச்சியைக் கொளுத்தி னான். காந்தா விளக்கை ஏற்றிக்கொண்டு அடுக் களைப் பக்கம் சென்றாள். போலீஸ் லைன் வீடுதான் நமக்குத் தெரியுமே; குருவிக் கூடு ! அடுக்களை படுக்கை யறை எல்லாம் ஒன்றுதான்.

கக

சின்னச்சாமி செருப்புகளைக் கழற்றிவிட்டு, ஒரு பீடியைப் பற்ற வைத்தபடி வாயிலில் உட்கார்ந் தான். பீடியின் சுருள் புகையோடு அவன் சிங் தனையும் ஒரு சுற்றுச் சுற்றியது. அதற்குள்,

7