பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரெ. முத்துக்கணேசன் செந்தமிழ்த் தாயே உன்றன் திருப்புகழ் வளர்த்தான் சென்றான் நந்தமிழ் நாட்டுக் காக நற்பணி செய்தான் சென்றான் பைந்தமிழ்க் கணேசன் இன்று பாசமாய்க் கம்பன் பாதம் வந்தனை செய்வ தற்கோ வானகம் சென்றான் அந்தோ செய்திடும் செயல்கள் யாவும் செம்மையாய்ச் செய்யும் வீரன் நெய்திடும் ஆடை போல நிலத்தினில் உதவும் தொண்டன் பெய்திடும் மழையைப் போல நாட்டினைப் பேணும் சான்றோன் ஐயகோ பிரிந்தான் அந்தோ அறிவுடைத் தலைவன் அம்மா. புலவரேறு இராய.சொ.பற்றிய பாடல்கள் சில. பொன்னொளிசேர் ஞாயிறெனப் பொலிவுடையன் புன்சிரிப்பன் சிவந்த மெய்யன் நன்மதிபோல் வெண்ணிறு துலங்கொளியாய் நலந்திகழும் நெற்றி யாளன் மன்னுலகில் இந்துமத மறைவளர வளர்சங்கம் காத்து வந்தோன் தென்தமிழ்க்கோர் கடல்ராய சொக்கலிங்கன் திருப்புகழ்கள் நீடு வாழ்க. உண்மையினை மந்திரமாய் உணர்ந்திங்கு வாழ்ந்திட்ட காந்தி தாளைத் திண்மையுறப் பரவியவர் புகழையெலாம் தீந்தமிழில் நூல்கள் பாடிப் பெண்மைபோல் பித்தாகி அவர்நெறியைப் பிடித்தொழுகும் தகைமை யாளன் மண்விளங்க விடுதலைக்குச் சிறைசென்ற மாண்புடையன் தொண்டு வாழ்க.